யாழ். அரச அதிபர் நியமனம்: அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் சிவசேனை


யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவ பாலசுந்தரனை நியமித்தமைக்கு அரசாங்கத்திற்கு நன்றியை
தெரிவித்துக் கொள்வதாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன்
தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கும்பல்

அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப் பொருள் கும்பல்களையோ மதமாற்றக் கும்பல்களையோ ஆட்சியில் அதிகாரத்தில்
நிர்வாகத்தில் விடக்கூடாது என்பதில் சிவ சேனையில் உள்ள நாங்கள் மிகத் தெளிவாக
செயல்படுகிறோம்.

மார்கழி 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (30.12.2022) அன்று சிவ சேனை உருத்திரசேனை
மற்றும் சைவ அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குச் செவி சாய்த்த
கொழும்பு அரசாங்கத்திற்கு இலங்கைச் சைவர்களின் நன்றி.

யாழ். அரச அதிபர் நியமனம்: அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் சிவசேனை | Divisional Secretariat Jaffna District Appoinment

ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியை உலகிற்கு அறிவித்த அச்சு ஊடகத்தார், மின் ஊடகத்தார்,
சமூக ஊடகத்தார் அனைவருக்கும் சைவ மக்களின் நெஞ்சார்ந்த நன்றி என மேலும்
தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.