அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பள்ளி மாணவியின் காளை வெற்றி.! 

பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டு தான். அதிலும் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனா புறம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானது. இதில் பல ஊர்களில் இருந்து பல மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைகள் பங்கேற்று வருகின்றனர்.

அந்தவகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்த யோக தர்ஷினி என்ற பள்ளி மாணவியின் காளை வெற்றி பெற்றுள்ளது. 

இவர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அத்துடன் தனது வீட்டில் வடமுகத்து கருப்பு, வீரா, பாண்டி மணி உள்ளிட்ட மூன்று ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட இவரது காளை, பிடிமாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், போட்டி குழுவினர் அவருக்கு ஆறுதல் பரிசு கொடுப்பதற்கு முன் வந்தனர். ஆனால் தனது மாடு பிடிமாடு, என்பதால், அதனை வாங்க மாணவி யோக தர்ஷினி மறுத்துவிட்டார். 

இதையடுத்து, இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தனது காளைகளை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், மாடுகளை தயார்படுத்தி வந்தார். அதற்காக அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியில், பங்கேற்பதற்கு தனது காளைகளை பதிவு செய்திருந்தார். 

அதன் படி, முதலில் நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இவரது காளை பிடிமாடாகியது. இருப்பினும், மனம் தளராத மாணவி யோக தர்ஷினி, தனது ஜல்லிக்கட்டு காளையான வீராவை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறக்கினார். அதில், அவரது காளை வெற்றி பெற்றது. 

இதற்காக மாணவி யோக தர்சினிக்கு இரண்டு தங்க காசுகள் மற்றும் ஒரு சைக்கிள் பரிசாக கிடைத்தது. அதனை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூர்த்தி உள்ளிட்டோர் நேரடியாக மாணவிக்கு வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.