பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11ம் தேதியன்று வெளியான விஜய்யின் ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிசில் 7 நாட்களில் ரூ.210 கோடி வசூலை வாரி குவித்துள்ளது. விஜய்யின் ‘வாரிசு’ படத்தை காட்டிலும், இவர் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் நடிக்கப்போகும் ‘தளபதி 67’ படத்தின் அப்டேட்டை அறிய தான் ரசிகர்கள் அதிகளவில் எதிர்நோக்கி காத்துகொண்டு இருக்கின்றனர். ‘தளபதி 67’ படத்தின் பணிகள் இந்த மாதத்திலிருந்து தொடங்கப்பட்டு விட்டது, இதன் கடைசி ஷெட்யூலில் விஜய் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. ‘தளபதி 67‘ படம் ஒரு பான்-இந்திய திரைப்படமாக மிகப்பெரிய தயாரிப்பில் உருவாகவிருக்கிறது. வெகு நாட்களாகவே ‘தளபதி 67’ படம் குறித்த பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிக்கொண்டே வருகின்றது.
‘தளபதி 67’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார், இதுதவிர இந்த படத்தில் சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் சார்ஜா, மிஸ்கின் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற பல நட்சத்திரங்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ‘தளபதி 67’ படத்தில் பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக்கவிருக்கிறது. ஹாலிவுட்டில் பிரபலமான ‘ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ என்கிற படத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் படத்தின் உரிமையை வாங்கிவிட்டதாகவும், அதனை தனது பாணிக்கேற்ப இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘777 சார்லி’ படத்தின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டி, இவருக்கு கன்னட திரையுலகம் மட்டுமின்றி பல தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு உள்ளது. தளபதி 67 படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் இப்படியொரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி இருப்பது விஜய் ரசிகர்களை மென்மேலும் ஆர்வத்தில் மூழ்க செய்து இருக்கிறது. ஏற்கனேவே லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் லோகேஷ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் ‘தளபதி 67’ படத்திற்கு எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. சமீபத்தில் தளபதி 67 படத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சி குறித்து மிஸ்கின் கூறி இருந்தார்.