தானே, மஹாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 70 வயது மூதாட்டி உட்பட இரு பெண்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிராவில், தானே மாவட்டத்தின் கல்யான் நகர் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில், நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
பின் நடந்த மீட்புப் பணியின் போது, புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் பாதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டியையும், அவரது பேத்தியையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement