உத்தியோகத்தர்கள் தங்கள் திறமைகளை முழுமையாக பயன்படுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்

யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் திரு. அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று (18.01.2023) காலை மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன்போது புதிய அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரினால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

 கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் ,மாவட்டத்தின் கீர்த்திக்கு வழிகாட்டியாக இருந்த முன்னாள் அரசாங்க அதிபர்கள் மற்றும் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன் இப்பதவி தனக்கு கிடைத்தமை ஓர் வரப்பிரசாதம் என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது தனது கடந்தகால அரச சேவையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கான சேவைகளை சரியான முறையில் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அரசாங்க உத்தியோகத்தர்கள் தங்கள் திறமைகளை முழுமையாக பயன்படுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதுடன், ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை நிர்வாக சேவையின் (விசேட தரம்) மூத்த அதிகாரியான இவர் மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற மாவட்டங்களில் பல்வேறு பதவிகளில் கடமைற்றியதுடன்,,2013 ஆம் ஆண்டு தொடக்கம் பிரதிப் பிரதம செயலாளராகவும், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றினார்..

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் , யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள், மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.