சிவகங்கை மாவட்டத்தில் திருமண நிச்சயத்திற்கு சென்ற கணவன்-மனைவி கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மிளகனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (60). இவருடைய மனைவி கஸ்தூரி (54). இவர்கள் இரண்டு பேரும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தீயனூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது தீயனூர் விளக்கு பகுதி அருகே சென்ற போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த கணவன்-மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.