மின்சாரம் – எரிபொருள் – வைத்தியசாலை சேவைகள் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு


நாட்டின் மின்சாரம், எரிபொருள் மற்றும் வைத்தியசாலை சேவைகள் என்பன தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டு இன்று (18.01.2023) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மின்சார வழங்கலுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் அதாவது, கனியவள உற்பத்திகள், எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் என்பன தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் - எரிபொருள் - வைத்தியசாலை சேவைகள் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு | Publication Of Special Gazette Notification

வர்த்தமானி அறிவித்தல்

மேலும, வைத்தியசாலைகள், மருந்தகங்கள், மற்றும் தாதியர் இல்லங்கள் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.