வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: பூமியின் உச்சபட்ச குளிர் உடைய நகரமாக, ரஷ்யாவின் யாகுட்ஸ்க் நகரம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு, தற்போது, ‘மைனஸ் 50 டிகிரி செல்ஷியஸ்’ வெப்பநிலை நிலவுகிறது.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இருந்து 5,000 கி.மீ., தொலைவில் யாகுட்ஸ்க் என்ற நகரம் உள்ளது. ரஷ்யாவே அதிக குளிர் பிரதேச நாடாக அறியப்பட்டாலும், யாகுட்ஸ்க் நகரத்தில் உச்சபட்ச குளிர் நிலவுகிறது.
இங்கு, வெப்ப நிலை பூஜ்யத்தை தொடுவதெல்லாம் சர்வசாதாரண நிகழ்வு என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
![]() |
குளிருடன் வாழப் பழகிவிட்டதால், அதை சமாளிக்கும் உத்திகளை அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இங்கு, ஜனவரி மாதம் கடுங்குளிர் நிலவும். அதிலும், ‘மைனஸ் 40 டிகிரி செல்ஷியஸ்’ வரை வெப்பநிலை இருக்கும் என கூறப்படுகிறது. இதை சமாளிக்கும் அளவுக்கு மக்கள் பழகி விட்டனர்.
ஆனால், தற்போது நிலைமை மேலும் மோசம் அடைந்து, வெப்பநிலை, ‘மைனஸ் 50 டிகிரி செல்ஷியஸ்’ ஆக குறைந்துள்ளது. ஆனாலும் மக்கள் பல்வேறு அடுக்குகளாக ஆடைகள், கையுறைகள், தொப்பிகள் அணிந்தபடி தங்கள் இயல்பு வாழ்க்கையை தொடர்கின்றனர். இந்நிலையில், பூமியின் கடுங்குளிரில் உறையும் நகரமாக யாகுட்ஸ்க் அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement