தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி சுவாரஸ்யமான போட்டிகள் நடத்தப்பட்டது.
காணும் பொங்கல் என்றாலே தமிழ்நாடு முழுவதும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கிராமம் தொடங்கி நகரம் வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில், தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் சாப்பாடு போட்டி வைக்கப்பட்டது. ஒரு டேபிளில் சிறுவர்கள், இளைஞர்களை அமர வைத்து, அவர்களுக்கு முன்பாக பிரியாணி பொட்டலம் வைக்கப்பட்டது.
அதனை 5 நிமிடத்திற்குள் சாப்பிடுபவரே வெற்றியாளர். போட்டியில் கலந்துகொண்ட இளைஞர்களும், சிறுவர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு பிரியாணியை சுவைத்தனர்.
போட்டியில் ஆடவர் பிரிவில் கஜேந்திரனும், பெண்கள் பிரிவில் மகாலட்சுமியும் வென்றனர். இதுபோலவே 5 நிமிடத்தில் சிக்கன் 65 சாப்பிட வேண்டும், அரை கிலோ ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று சாப்பாடு போட்டி நடத்தப்பட்டது.
newstm.in