சென்னை: முதலமைச்சரின் 4 செயலாளர்களில் ஒருவரான அனு ஜார்ஜ் விடுமுறையில் செல்வதை முன்னிட்டு,உதயசந்திரன் உள்பட 3 செயலாளர்களுக்கு அவரது துறைகள் பிரித்து ஒதுக்கீட்டு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு செய்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனு ஜார்ஜிடம் இருந்த 12 துறை களும் மற்ற செயலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. உதயசந்திரன் ஐஏஎஸ்க்கு கூடுதலாக மூன்று துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களாக […]