அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்த வீரர்! எனக்காக எப்போதும் இருக்கிறீர்கள் என டிவில்லியர்ஸ் உருக்கமான பதிவு


தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் ஹசிம் ஆம்லா அனைத்து வித போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் மூத்த வீரர்

39 வயதாகும் ஹசிம் ஆம்லா, டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் 18,672 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

டெஸ்டில் 28 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 27 சதங்களும் விளாசியுள்ள ஆம்லா, அதிகபட்சமாக டெஸ்ட் போட்டியில் 311 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

ஹசிம் ஆம்லா/Hashim Amla

@AP

இந்த நிலையில் தான் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆம்லா அறிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆம்லா, அதன் பிறகு கிளப் போட்டிகளில் விளையாடி வந்தார்.

ஹசிம் ஆம்லா/Hashim Amla

@Getty

டிவில்லியர்ஸின் உருக்கமான பதிவு

ஆம்லாவின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ளார்.

அவரது பதிவில், ‘ஹசிம் ஆம்லா..நான் எங்கிருந்து தொடங்குவது?! எளிதானது அல்ல. எனக்கு சில நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் ஆகலாம்.

நான் உங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுத முடியும்.ஹுமாம், எப்போதும் எனக்காக இருப்பதற்கு நன்றி.

நீங்கள் எப்போதும் பல வழிகளில் என்னைப் பாதுகாப்பாக உணர செய்த சகோதரராக இருந்தீர்கள்’ என தெரிவித்துள்ளார்.    

ஹசிம் ஆம்லா/Hashim Amla

@Getty



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.