ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட எடப்பாடி தரப்பு திட்டம். எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அடுத்த வாரம் டெல்லி சென்று தேர்தல் ஆணையர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
