சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உள்பட இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெம்பக்கோட்டை அடுத்த கனஞ்சாம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையை, விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் குதைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில் 150 க்கும் மேற்பட்டவர்கள் பனி செய்கின்றனர். 70-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில், பெண் உள்பட இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திருத்தங்கல்லைச் சேர்ந்த ரவி, (60) த/பெ. குருசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ஜெயராஜ், (வயது 48) த/பெ.ஆசீர்வாதம் என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறார்.