வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது வீராங்கனைகள் புகார் தெரிவித்து டில்லி ஜந்தர்மந்தரில் 2வது நாளாக தர்ணா போராட்டம் நீடிக்கிறது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக உ.பி., லோக்சபா எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங், இவருக்கு எதிராக வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் மல்யுத்த வீரர்கள் மற்றும் மார்க்., கம்யூ., கட்சியின் மூத்த நிர்வாகி பிருந்தா காரத் பங்கேற்று ஆதரவை தெரிவித்துள்ளனர். விளையாட்டுத்துறை அமைச்சகம் தலையிட்டு முக்கிய நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement