தமிழக அரசின் முக்கிய செயலாளர்களில் முதன்மையாக இருப்பவர் முதல்வர் மு.க ஸ்டாலினின் தனிச்செயலாளராக இருக்கும் உதயசந்திரன் ஆவார். இவருக்கு தற்பொழுது சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று முதல்வர் மு க ஸ்டாலின் மற்றொரு துணைச் செயலாளராக உள்ள உமாநாத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் துறை, ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மற்றொரு செயலாளரான சண்முகத்திற்கு கால்நடை மற்றும் மீன்வளத்துறை, கைத்தறி, காதி, சமூக சீர்திருத்தம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதல்வரின் சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகள் திட்டமிடல் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் முதல்வரின் 4வது தனிச் செயலாளராக இருந்த அனுஜ் சார்ஜுக்கு வழங்கப்பட்டிருந்த துறைகளாகும். தற்போது மூன்று தனி செயலாளருக்கு பிரித்து வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வரின் தனிச் செயலாளராக உதயசந்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.