’தமிழ்நாட்டின் மிகப்பெரிய தலைவர்’ அண்ணாமலை போட்டியிட தயாரா? சீண்டும் காயத்திரி ரகுராம்

பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய காயத்திரி ரகுராம், தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு எதிராக தொடர்சியாக சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கும் காயத்திரி ரகுராம், அவர் வந்த பிறகே தமிழக பாஜகவில் ஹனி டிராப் விஷயம் பிரபலமானதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தொடர்ச்சியாக அண்ணாமலைக்கு எதிராக டிவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் காயத்திரி ரகுராம், ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்க தயாரா? என அண்ணமலைக்கு சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டரில் எழுதியுள்ள பதிவில், ” அண்ணாமலை நீங்கள் தமிழ்நாட்டில் மிகவும் பெரிய தலைவர். ஓப்டிக்ஸ் படி உங்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறலாம். ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் ஏன் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக்கூடாது?, இடைத்தேர்தலில் கூட்டணியில் உள்ளீர்களா? அல்லது தனித்து போட்டியிடுகிறீர்களா? அல்லது சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடியுமா?, இடைத்தேர்தலுக்காக குழுவை அமைத்துள்ளீர்களா?. எனவே நீங்கள் போட்டியிடுகிறீர்களா? இல்லையா? என்பதை ஏன் அறிவிக்கக்கூடாது.. அதற்கு ஏன் ஒரு குழு?” என்று சரமாரியாக வினவியுள்ளார். 

அண்ணாமலை போட்டியிட்டால் அவருக்கு எதிராக சுயேட்சையாக தான் களமிறங்க உள்ளதாகவும், இதற்கான பதிலை அவரிடம் எதிர்பார்ப்பதாகவும் காயத்திரி ரகுராம் கூறியுள்ளார். இருப்பினும் இந்த கேள்விகளுக்கு அண்ணாமலை எந்த பதிலும் அளிக்காவிட்டாலும், அண்ணாமலை ஆதரவாளர்கள் காயத்திரி ரகுராமை கடுமையாக விளாசி, டிவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.