மதுரை: சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் மீதான வழக்கில் மதுரை ஆட்சியர் அறிக்கை அளிக்க உயர்நிதிமன்ற கிளை ஆணை விதித்துள்ளது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் மீதான வழக்கை பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது. வழக்கு தொடர்பாக நகர திட்டமிடல் இயக்குநர், தீயணைப்பு துறை சார்பில் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. கட்டுமானப்பணி, பாதுகாப்பு வசதி நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட தடைகோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.