‘வாங்க நண்பா ஜாலியா ஒரு டிரைவிங் போகலாம்’ – வாரிசு செட்டில் விஜய்யுடன், ஷாம்-வைரல் வீடியோ

‘வாரிசு’ படப்பிடிப்பின்போது நடிகர் விஜய்யுடன் Electric Buggy-யில் சென்று என்ஜாய் செய்த வீடியோவை, நடிகர் ஷாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பொது இடங்களில் அமைதியாக காணப்படும் நடிகர் விஜய், படப்பிடிப்பில் எப்போதும் சக நடிகர்கள், நடிகைகளுடன் கலகலப்பாக கலாட்டா செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து வைரலாகும். அந்தவகையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘வாரிசு’ படப்பிடிப்பின்போது, செட்டிற்கு உள்ளேயே இருந்த புல்வெளிப் பகுதியில் Electric Buggy-ஐ, விஜய் ஓட்டிச் செல்ல, அவருக்கு அருகில் அமர்ந்து ஜாலியாக செல்லும் வீடியோவை நடிகர் ஷாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் ‘தீ தளபதி’ பாடலுடன், ‘தி ஆல் டைம் பாக்ஸ் ஆபீஸ் கிங்’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு 7 நாட்களில் ரூ. 210 கோடி வசூல் என்றும் மகிழ்ச்சியுடன் அவர் கேப்ஷன் இட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு அதிகளவில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

View this post on Instagram

A post shared by SHAAM (@actor_shaam)

‘வாரிசு’ படத்தில் நடிகர் ஷாம், விஜய்க்கு சகோதரனாக நடித்திருந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி வெளியான ‘வாரிசு’ திரைப்படம், கலவையான விமர்சனங்களுக்கு இடையே, இதுவரை ரூ. 225.5 கோடி வரை வசூலித்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக, லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக அந்தப் படத்திற்கு ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இதுவரை இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.