சென்னை: தமிழ்நாட்டில் அதிகாலையில் லேசான பனிமூட்டம், இரவில் உறைபணிக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழக மாவட்டங்களுக்கான வானிலை அறிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. […]
