திண்டுக்கல் மாவட்டம் மரவப்பட்டியைச் சார்ந்த விவசாயி ராயப்பன் (65), இவர் தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். ஏதேனும் பண்டிகைகளுக்கு அவர்கள் சொந்த ஊர் வந்து பெற்றோர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இந்த வருட பொங்கல் பண்டிகைக்கும் குடும்பத்தினர் அனைவரும் பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு வந்திருக்கின்றனர்.
ராயப்பனின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் வின்சென்ட். இவரது வீட்டில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வளர்த்து வருகிறார். அந்த நாயை அடிக்கடி வீட்டிலிருந்து வெளியே வந்து சாலையில் செல்பவர்களை கடித்து விடுவது வழக்கம். சம்பவம் நடந்த நாளன்று ராயப்பனின் பேரப்பிள்ளைகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட பக்கத்து வீட்டு நாய் குறைத்துள்ளது. அந்த சத்தம் கேட்டு வெளியே வந்த ராயப்பன் அந்த நாய் கடித்து விடும் அந்தப் பக்கம் சென்று விளையாடாதீர்கள் என தனது பேரை பிள்ளைகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். இதனைக் கேட்ட வின்சென்ட் நாங்கள் குழந்தையாக பாவித்து வளர்க்கும் பிராணியை எப்படி நாய் என்று சொல்லலாம் என ராயப்பனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த வின்சென்டின் தம்பி டேனியல் ராஜ் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து முதியவர் ராயப்பனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த ராயப்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை தலைமுறைவாகியுள்ள டேனியல் ராஜை தேடி வருகிறது.