வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாசில், உள்ள ஹிந்து கோவிலில் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
டெக்சாசின் பிரேஜோ வேலி பகுதியில் ஸ்ரீஓம்காரநாதர் கோயில் உள்ளது. இங்கு அமைந்துள்ள ஹிந்து கோவில் இது ஒன்றே ஆகும். இங்கு, கடந்த 11ம் தேதி கோவிலின் சுவரின் பக்கவாட்டில் உள்ள ஜன்னலை உடைத்து, விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளன. இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில், உள்ளே வந்த மர்ம நபர் ஒருவர் நன்கொடை பெட்டி மற்றும் அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்களை எடுத்து செல்வது பதிவாகி உள்ளது.

கோவில் அருகே குடியிருந்த, பூஜாரி மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்புடன் உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement