இம்மாத இறுதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்! அமைச்சர் கெடு!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இம்மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர்.

முதலில் டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். அதாவது 75% பேர் மின் இணைப்பை, ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர்.

இந்நிலையில், ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.