வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: விமானத்தில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரத்தில், ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவ.,26 ல் நியூயார்க் நகரில் இருந்து டில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பயணித்த 70 வயது மதிக்கத்தக்க பெண் மீது, போதையில் இருந்த சங்கர் மிஸ்ரா என்பவர் சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்து அந்த பெண், ஏர் இந்தியா நிறுவனத்திடம் புகார் அளித்தார். இது தொடர்பாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் மிஸ்ராவை பெங்களூருவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய டிஜிசிஏ, சிறுநீர் கழித்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. விமான சட்டத்தின் 141வது விதியின் கீழ் தனது கடமையை செய்ய தவறிய, விமானத்தை இயக்கிய தலைமை விமானியின் உரிமம் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடமையை செய்ய தவறிய ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகள் இயக்குநருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement