குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு கண்டனம்

புதுடெல்லி: 2022 குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் அதை தொடர்ந்து நடந்த கலவரம் குறித்து பிபிசி தொலைக்காட்சி ஆவணப்படம் தயாரித்துள்ளது. இதில், இங்கிலாந்து வௌியுறவுத்துறையின் முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா என்பவர் பேசியுள்ள கருத்துகள் இடம் பெற்றுள்ளது. மேலும் கலவரத்துக்கு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி தான் காரணம் என்று ஒருவர் பேசிய கருத்தும், குஜராத் கலவரம் தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கையும் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆவணப் படத்துக்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளதாவது, “இந்த ஆவணப் படம் அந்த படத்தை தயாரித்த ஒரு ஏஜென்சியின் எண்ண ஓட்டத்தை வௌிப்படுத்துகிறது. இது ஒரு பிரசார யுக்தி. இந்த படத்தில் பாரபட்சம், காலனித்துவ மனப்பான்மை மிகுந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு எதிராக அவதூறு கருத்துகளை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் இது எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தையும், இதுபோன்ற முயற்சிகளையும் ஏற்று கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.