சென்னை: குடியரசு தினமான ஜனவரி 26ந்தேதி, தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும், அன்றைய தினம், பட்டியலின தலைவர்கள் உள்ள ஊராட்சிகளில், அவர்கள் கொடியேற்ற வேண்டும் என தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார். குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இறையன்பு அறிக்கையில், ” ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் […]
