திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவப்பட்டியில், புனித உத்திரிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
போட்டியில் மொத்தமாக 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றிருக்கும் நிலையில், பல்வேறு சுற்றுகளாக போட்டி நடத்தப்படுகிறது.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை அடக்கும் காளையர்களுக்கும், காளையர்களிடம் சிக்காமல் திமிரிச் செல்லும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், எல்.இ.டி டிவி, தங்கக்காசு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படுகின்றன.
போட்டியின் போது காளைகள் முட்டியதில், சுமார் 10 பேர் காயமடைந்தனர்.