வாஷிங்டன்,-அமெரிக்காவில், சட்டவிரோத மருந்துகளை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து கடத்திச் சென்று விற்றதாக, இந்திய இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தவர் மணிஷ் குமார், ௩௪.
இவர், பல்வேறு நிறுவனப் பெயர்களில் சட்டவிரோத மருந்துகளை தயாரித்து, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்துள்ளார்.
இந்த மருந்துகள் அனைத்தும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டவை.
இவற்றை டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல் விளம்பரங்கள் மற்றும் ‘கால் சென்டர்’ வாயிலாக, அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மருந்துகளை நேரடியாக ‘சப்ளை’ செய்து வந்துள்ளார்.
இதன் வாயிலாக, இவர் ௨௮ கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை கடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்ட குமாருக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ௮0 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, பாஸ்டன் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement