பிலாஸ்பூர்:சத்தீஸ்கரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.
சத்தீஸ்கரில் உள்ள முங்கேலி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் 5 வயது சிறுமி சமீபத்தில் பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் வீடு திரும்பியுள்ளார். பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரை வீட்டில் விடச் சென்ற கண்டக்டர் வழியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தன் தாயிடம் சிறுமி தெரிவித்ததை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பஸ் கண்டக்டரை நேற்று கைது செய்தனர். சம்பவம் நடந்த நாளில் பஸ்சில் இருந்த டிரைவர் மற்றும் ஆசிரியைகளிடம் இது குறித்து கேட்டறிந்த போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement