லண்டன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், 100க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசினார். அந்த வீடியோவில் ரிஷி சுனக், காரில் ‛சீட் பெல்ட்’ அணியாமல் பயணித்தபடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது வைரலாக பரவியதுடன், பிரதமரே சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றதற்கு பலரும் விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில், சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தவறை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்டதாக அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement