சென்னை துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு கண்டெய்னர் லாரி ஒன்று வல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி அத்திப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்தில் சென்ற போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டுள்ளது.
இதனால் விபத்தை தவிர்க்க கண்டெய்னர் லாரி டிரைவரின் லாரியை திருப்பி உள்ளார். அப்போது அவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலத்தின் தடுப்புச்சுற்றில் மோதி அந்தரத்தில் தொங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிற வாகன ஓட்டிகள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து அத்திப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராட்சத ஏணியை மூலம் லாரியில் இருந்து டிரைவரை பாத்திரமாக கொசஸ்தலை ஆற்றின் வழியாக இறக்கப்பட்டார். பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு மேம்பாலத்தின் அந்தரத்தில் தொங்கிய கண்டெய்னர் லாரி அகற்றி போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர்.