திருவண்ணாமலையை அருகே பள்ளி வாகனம் மோதி 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கொரக்காந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கல்பனா. இவரின் நான்கு வயது மூத்த மகளை, அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.
சம்பவம் நடந்த இன்று கல்பனாவின் மூத்த மகள் பள்ளி முடிந்து தனியார் பள்ளி வாகனத்தின் வந்து இறங்கியுள்ளார்.
அந்த சமயம் கல்பனாவின் இளைய மகள் ஜெசிக்கா, எதிர்பாராத விதமாக பள்ளி வாகனத்தின் முன்பு சென்று தாயை தேடியுள்ளார்.
சிறுமியை பார்க்காத வாகன ஓட்டுனர், சிறுமி ஜெசிக்கா மீது பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், சிறுமி ஜெசிக்கா சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார், பள்ளி வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.