தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில் தேசியக்கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர், “குடியரசு தின விழாவானது இணக்கமாக நடைபெறுவதை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்திடல் வேண்டும்.
அன்றைய தினத்தில் நடக்கும் கிராம சபை கூட்டங்களில் எந்த விதமான சாதிய பாகுபாடும் நடைபெற கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டியலின தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றும் போது எந்த விதத்திலும் பிரச்சனைகள் எழவே கூடாது.
தக்க நடவடிக்கைகள் எடுத்து ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி அறிக்கை கொடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.