வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை ஓரளவு மீண்டதற்கு முக்கிய காரணம் இந்தியா எனவும், அதற்காக நன்றி என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது ஜெய்சங்கர் மற்றும் அலி சப்ரி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அலி சப்ரி கூறியதாவது: நாங்கள் (இலங்கை) மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில், இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் ஓரளவு மீண்டுள்ளதற்கு மிக முக்கிய காரணம் இந்திய அரசின் உதவிதான்.

அத்தியாவசிய பொருட்கள், மனிதாபிமான உதவிகள் என 4 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா எங்களுக்கு உதவியது. இதற்காக பிரதமர் மோடி, இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கை அதிபர் சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் நன்றி. அதேபோல், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் அளிக்க இந்தியா அளித்த உத்தரவாதமே காரணம். அதற்காகவும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
ஜெய்சங்கர் கூறுகையில், ‛பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை வெளிவர எவ்வாறு உதவ முடியுமோ அதை உடனடியாக இந்தியா செய்தது. இலங்கைக்கு கடனளிக்கும் விவகாரத்தில், சர்வதேச அமைப்புகள் தயக்கமின்றி கடனுதவி அளித்து இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என இந்தியா விரும்புகிறது’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement