குணா: காங்கிரஸ் தொண்டர்களே, பாஜவில் சேருங்கள்… இல்லாவிட்டால் புல்டோசரை எதிர்கொள்ள வேண்டும் என்ற மபி அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலத்தை போன்று மத்திய பிரதேசத்திலும் கலவரங்களில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தின் ரகோகார் நகராட்சிக்கு தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த புதனன்று நடந்த பிரசார கூட்டத்தில் அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா கலந்து கொண்டார். இதில் அவர் பேசுகையில், ‘‘காங்கிரஸ் தொண்டர்கள் கவனிக்கவும். நீங்கள் கொஞ்சம், கொஞ்சமாக பாஜவில் சேருங்கள். இல்லாவிட்டால் புல்டோசரை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்தாண்டு நடக்கும் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜ மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது புல்டோசர் தனது வேலையை தொடங்கும்’’ என்றார். மாநில பாஜ அமைச்சர் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
