டெல்லி: பாலியல் புகார் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் கூட்டம் இன்று மாலை 5.45 மணிக்கு கூடுகிறது. மல்யுத்த வீரர்கள் புகார் கடிதம் அனுப்பிய நிலையில் தலைவர் பிடி உஷா தலைமையில் ஐ.ஓ.சி. ஆலோசனை நடத்தவுள்ளது. வீரர்கள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, ரவி தஹியா, தீபக் புனியா, சாக்ஷி மாலிக் கடிதம் அனுப்பியிருந்தனர்.
