பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம்: சர்ச்சை வீடியோ மீது நடவடிக்கை


பிரித்தானிய பிரதமர் காரில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பிரதமர் சர்ச்சை வீடியோ

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் வீடியோ கிளிப் ஒன்று சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இது குறித்து டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்டு இருந்த விளக்கத்தில், சிறிய வீடியோ கிளிப்பை படமாக்க பிரதமர் தனது சீட் பெல்ட்டை அகற்றினார். இது தவறு என்று அவர் முழுமையாக ஏற்றுக் கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்கிறார் என்று தெரிவித்து இருந்தது.

மேலும் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட தகவலில், “அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பிரதமர் நம்புகிறார்.” சீட் பெல்ட் இருக்கும் போது அணியத் தவறினால் £500 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.

இதற்கிடையில் பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் வெளிவந்த வீடியோ விவகாரம் எங்களுக்குத் தெரியும், நாங்கள் அதை விசாரித்து வருகிறோம் என்று லங்காஷயர் பொலிஸார் தெரிவித்து இருந்தனர்.

பிரதமருக்கு அபராத நோட்டீஸ்

இந்நிலையில் ரிஷி சுனக் சீட் பெல்ட் அணியாமல் பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டது என்று லங்காஷயர் காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டது.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம்: சர்ச்சை வீடியோ மீது நடவடிக்கை | Seatbelt Issue Uk Rishi Sunak Given Fixed PenaltyPA 

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், பிரதமர் Lancashire-ல் ஓடும் காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிய தவறியதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த விஷயத்தை ஆராய்ந்த பிறகு, இன்று (வெள்ளிக்கிழமை, ஜனவரி 20) பிரதமர் ரிஷி சுனக்-கிற்கு நிலையான அபராதம் என்ற நிபந்தனை சலுகையை வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.