சென்னையில் பிரிந்து சென்ற மனைவியை கணவர் கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பரதன் (29). இவரது மனைவி தனலட்சுமி (29). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று வருடங்களாக தனலட்சுமி கணவரை பிரிந்து எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதையடுத்து நேற்று முன்தின இரவு மாமியார் வீட்டுக்கு சென்ற பரதன், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருடைய தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பரதன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை வெட்டியுள்ளார்.
மேலும் தடுக்க வந்த மாமனார் மற்றும் மைத்துனரையும் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து காயமடைந்த மூன்று பேரும் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறியும் வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியால் வெட்டிய பரதனை கைது செய்தனர்.