பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் கழிப்பவர் மீதே திருப்பி அடிக்கும்! லண்டனில் சூப்பர் திட்டம் அறிமுகம்


பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க புதிய நடவடிக்கையாக லண்டனின் முக்கிய பகுதியில் ‘Anti-pee paint’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லண்டன் – சோஹோ பகுதியில்

அதன்படி லண்டன் – சோஹோ பகுதியில், சுவர்களில் சிறுநீர் கழித்தால், கழிப்பவர் மீதே திருப்பி அடிக்கும் வகையிலான நவீன ‘Anti-pee paint’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 10 இடங்களில் உள்ள சுவர்களில் இந்த பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
லண்டனின் சோஹோவில் பார்கள், உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மேலதிகமாக மற்ற இடங்களின் பல உள்ள நிலையில் இந்த நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் கழிப்பவர் மீதே திருப்பி அடிக்கும்! லண்டனில் சூப்பர் திட்டம் அறிமுகம் | Central London Authorities Apply Anti Pee Paint

புகார்களை தொடர்ந்து

இந்த விடயம் பயனுள்ளதாக இருப்பதாக உள்ளூர் கவுன்சிலர் ஐச்சா லெஸ் AFP இடம் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்டர் சிட்டி கவுன்சில், சோஹோவின் சுமார் 3,000 குடியிருப்பாளர்களிடமிருந்தும், தொழிலாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் புகார்களைத் தொடர்ந்து இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.