மயக்கமடைந்த நோயாளிகளிடம் மருத்துவரின் அட்டகாசம்: 20,000 ஆபாச படங்கள் மீட்பு


பிரேசிலில் மயக்கமடைந்த நோயாளிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மிருகத்தனமான மருத்துவர் ஆண்ட்ரெஸ் எட்வர்டோ ஓனேட் கரில்லோ, சுமார் 20,000 குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோக படங்களை வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மருத்துவரின் அட்டகாசம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அறுவை சிகிச்சையின் போது இரண்டு பெண் நோயாளிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக மருத்துவ ஆண்ட்ரெஸ் எடுவார்டோ ஓனேட் கரில்லோ( Andres Eduardo Onate Carrillo) ஜனவரி 16ம் திகதி கைது செய்யப்பட்டார்.

உள்ளூர் ஊடகங்களின் அறிக்கைகளின் படி, 32 வயதான நோயாளிகளை துஷ்பிரயோகம் செய்யும் மூன்று வீடியோக்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

மயக்கமடைந்த நோயாளிகளிடம் மருத்துவரின் அட்டகாசம்: 20,000 ஆபாச படங்கள் மீட்பு | Brazil Doctor Who Raped Sedated PatientsNewsflash

அத்துடன் மயக்கமடைந்த நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர், அவரது மின்னணு சாதனங்களில் 20,000 நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்து இருந்ததையும் கண்டுபிடித்தனர்.

இதனால் சம்பந்தப்பட்ட மருத்துவர் பாலியல் குற்றசாட்டுகள் உடன், குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.


பொலிஸார் விசாரணை

காவல்துறை செய்தி தொடர்பாளர் லூயிஸ் ஹென்ரிக் மார்க் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த தகவலில், “புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பிய குழந்தைகளுடனான உரையாடல்களின் திரைப் பதிவுகளை அவரது செல்போனிலிருந்து நாங்கள் கண்டோம் என தெரிவித்துள்ளார்.

மயக்கமடைந்த நோயாளிகளிடம் மருத்துவரின் அட்டகாசம்: 20,000 ஆபாச படங்கள் மீட்பு | Brazil Doctor Who Raped Sedated PatientsNewsflash

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு எதிரான குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது படங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.