யாழில் வாள்வெட்டு: வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம்


கல்வியங்காட்டுப் பகுதியில் வர்த்தக நிலையம் மற்றும் அதன் உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையம் மீதும் உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணத்தில் செயற்படும் கும்பல் ஒன்றுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளதாாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

நேற்றுமுன் இரவு கல்வியங்காடு சந்தி பகுதியில்
இடம்பெற்ற இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவினரை கைது செய்வதற்காக விசேட அணி ஒன்று
களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழில் வாள்வெட்டு: வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் | Sword Cut In Jaffna

வாள் வெட்டுத் தாக்குதல்

வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை மூடுவதற்கு
தயாரான நேரத்தில் வாள் மற்றும் கொட்டன்களுடன் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7
பேர் கொண்ட குழுவினரே குறித்த தாக்குதலை நாடத்தியுள்ளனர்.

மேற்படி குழுவினர் வர்த்தக நிலையம் மீது வெற்று பியர் போத்தல் கொண்டு
தாக்குதல் நடத்தியதுடன், உரிமையாளரினை வாளால் வெட்டிவிட்டு வர்த்தக
நிலையத்தினையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

பின்னர் வர்த்தக நிலையத்திலிருந்த ஐந்து லட்சம் ரூபா பணத்தினையும் குறித்த
குழுவினர் திருடி சென்றுள்ளனர்.

வெட்டு காயங்களுக்கு உள்ளான வர்த்தக நிலைய உரிமையாளர் யாழ் போதனா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், தடயவியல்
பொலிஸார் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சி.சி.டி.வி காணொளிகளின் அடிப்படையில் குறித்த குழுவினரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.