தனுஷ்கோடி இலங்கை இடையே உள்ள பகுதி ராமர் பாலம் என அழைக்கப்படுகிறது. ராமாயண புராணத்தில் உள்ள இந்த பாலம் ராமரின் கட்டளையினால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் கால்வாய் அமைத்து கப்பல்கள் செல்ல வழி வகுக்கும் சேது சமுத்திர திட்டத்திற்கு இது இடையூறாக உள்ளது.
இந்த நிலையில் ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ராமர் பாலம் இருந்ததற்கான அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ராமர் பாலம் குறித்து சுப்பிரமணிய சுவாமி தொடங்கிய வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. அதன்படி ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டால் சேது சமுத்திர திட்டம் அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ராமர் பாலத்திற்க்கு பாதிப்பு எதுவும் இல்லாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்று பாஜக செயற்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி மேலும், கட்சி வளர்ச்சிக்கு நிதி சேகரிப்பதற்காகவும், பூத் கமிட்டியை வலுப்படுத்துவதற்காகவும் பாஜக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.