லொட்டரியில் வென்றும் லண்டன் மக்களால் உரிமை கோரப்படாத பெருந்தொகை: வெளிவரும் தகவல்


லண்டன் மக்கள் பலர் EuroMillions லொட்டரியில் பரிசுகள் வென்றும், இதுவரை உரிமை கோராமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உரிமை கோர வேண்டும்

பலர் உரிமை கோரவில்லை என்பதுடன், உரிமை கோரியும் இன்னும் சரிபார்க்கப்பட்டு பணம் செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. நாடு முழுவதும் வாங்கிய National லொட்டரி மூலம் மில்லியன் கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள டிக்கெட் பரிசுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

லொட்டரியில் வென்றும் லண்டன் மக்களால் உரிமை கோரப்படாத பெருந்தொகை: வெளிவரும் தகவல் | Winning Tickets Unclaimed In London

@getty

ஆனால் பரிசை வென்றவர்கள் காலதாமதமின்றி துரிதமாக செயல்பட்டு உரிமை கோர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
180 நாட்களுக்குள் முறையான ஆதாரங்களுடன் உரிமை கோரப படவேண்டும்.
தவறினால் அந்த தொகையானது பிரித்தானியா முழுமையும் National லொட்டரி முன்னெடுக்கும் திட்டங்களுக்காக செலவிடப்படும்.

இந்த நிலையில், EuroMillions லொட்டரியில்
உரிமை கோரப்படாமல் போன மூன்று பெரிய பரிசுகள் லண்டனில் வாங்கிய டிக்கெட்டுகள் என கூறப்படுகிறது.
இதில் ஈலிங் நகரத்தில் வாங்கப்பட்ட ஒரு டிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை இதுவரை எவரும் கைப்பற்றவில்லை என்றே கூறப்படுகிறது.

மொத்த மதிப்பு 66,729 பவுண்டுகள்

அதன் மொத்த மதிப்பு 66,729 பவுண்டுகள் என கூறுகின்றனர். 2022 ஆகஸ்டு 19ம் திகதி நடந்த குலுக்கலில் லண்டன் நபருக்கு தொடர்புடைய தொகை பரிசாக கிடைத்துள்ளது.

எதிர்வரும் பிப்ரவரி 15ம் திகதி வரையில் அந்த நபருக்கு உரிமை கோருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்,
மேலும், மாதம் 10,000 பவுண்டுகள் ஓராண்டுக்கு என பரிசாக கிடைத்துள்ளதும் இதுவரை எவரும் உரிமை கோரவில்லை.

லொட்டரியில் வென்றும் லண்டன் மக்களால் உரிமை கோரப்படாத பெருந்தொகை: வெளிவரும் தகவல் | Winning Tickets Unclaimed In London

@getty

இந்த நபருக்கு ஜூன் 3ம் திகதி வரையில் உரிமை கோர அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Tewkesbury பகுதியில் வாங்கப்பட்ட ஒரு டிக்கெட்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது.

இதேபோன்று Hertsmere பகுதியில் வாங்கப்பட்ட டிக்கெட்டுக்கும் 1 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளது. இந்த இருவரும் இதுவரை உரிமை கோரவில்லை என்றே கூறுகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.