9 தீர்மானங்கள்… ஏப்ரல் 14 நடைபயண திட்டம்… கடலூரில் பாஜக நிகழ்த்திய பலே பாலிடிக்ஸ்!

பாஜக மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முதல்முறை நடைபெற்று வருகிறது. இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. மாநில செயற்குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பாஜக மாநில செயற்குழு

மாநில செயற்குழு பொறுப்பாளர்கள் 451 பேர் பங்கேற்றனர். மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் சிபி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.சம்பத், கடலூர் மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் பல்வேறு பொறுப்பாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

குஜராத் தேர்தல் வெற்றி

இந்நிலையில் பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி ஒரு சரித்திர வெற்றி. தொடர்ந்து 27 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து, அதன் பின்னர் சரித்திர வெற்றியை பதிவு செய்துள்ளனர். குஜராத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 128 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர்.

பிரதமர் மோடி மீது நம்பிக்கை

பிரதமர் மோடி மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் மாபெரும் வெற்றிக்கு காரணம். குறிப்பாக பட்டியல் இனத்தை சேர்ந்த 40 தொகுதிகளில் 36 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத் தேர்தல் ஜனநாயகத்திற்கு ஒரு பாடம். கட்சி பணிகளுக்காக நிதி சேகரிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்செந்தூர் நடைபயணம்

பூத் கமிட்டியை வலுப்படுத்தும் வேலைகளில் கட்சியினர் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில் திருச்செந்தூரில் வரும் ஏப்ரல் 14ல் நடைபயணம் தொடங்க திட்டமிட்டிருப்பதாக அண்ணாமலை கூறினார். இதையடுத்து 9 முக்கிய
தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.

ஜி20 மாநாட்டிற்கு தலைமை பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிக்கு பாராட்டுகளும், நன்றிகளும்சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக அராஜகம் நடந்துள்ளதாக கண்டனம்ராமர் பாலம் சேதமடையாமல் சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த வேண்டும்வேங்கைவயலில் பட்டியல் சமூக மக்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்காசி தமிழ் சங்கத்தை தந்தை பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக திமுக அரசிற்கு கண்டனம்தமிழக விவசாயிகளையும், நெசவாளர்களையும் வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை 8வது இடத்திற்கு தள்ளிய திராவிட மாடல் அரசுபாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்

இதையடுத்து பிற்பகலில் மீண்டும் செயற்குழு கூட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதில் அண்ணாமலை மீண்டும் உரையாற்றுகிறார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஏதேனும் அறிவிப்புகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.