உண்மையான அதிமுக நாங்கள்தான், எங்களை ஆதரியுங்கள் – ஈபிஎஸ் தரப்பு

தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் அரங்கை பரபரக்க வைத்துள்ளது. கூடுதல் எம்எல்ஏவை பெற அதிமுக முயற்சி வரும் நிலையில், ஓபிஎஸ் பாஜக மூலமாக எடப்பாடி அணிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.

ஈரோடு கிழக்கு தேர்தலில் கடந்த முறை அதிமுக கூட்டணியில் தமாக போட்டியிட்டது. ஆனால், இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த
எடப்பாடி பழனிசாமி
விரும்பவே தமாக அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆனால், பாஜக சார்பில் வேட்பாளரை நிறுத்த அண்ணாமலை விரும்புவதால் பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி அணி கமலாலயம் சென்றது. இதற்கிடையே, ஓபிஎஸ் அளித்த பேட்டியில், ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு தருவோம் என்று கூறி எடப்பாடிக்கு குடைச்சல் கொடுத்துவிட்டார்.

இதை சாதகமாக்கிக்கொண்ட அண்ணாமலை எடப்பாடி அணியிடம் தனது விருப்பத்தை கூறி ஆதரவு கரம் கோரியுள்ளார்.

ஆனால், எடப்பாடி அணியோ, நாங்கள்தான் உண்மையான அதிமுக எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று அண்ணாமலையிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், மற்ற பாஜக மூத்த நிர்வாகிகளோ எடப்பாடி தலைமையிலான அதிமுகவை ஆதரிப்பதே சிறந்தது என அண்ணாமலைக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

ஒருவேளை அண்ணாமலை தனது முடிவில் தீவிரமாக இருந்தால் ஈபிஎஸ் அணியிடம் இருந்து விலகி ஓபிஎஸ் தரப்பு ஆதரவுடன் பாஜக இடைத்தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த முடிவுக்கு முன்பு அண்ணாமலை பாராளுமன்ற தேர்தலையும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என்கிறது ஈபிஎஸ் தரப்பு தகவல்.

முன்னதாக, இபிஎஸ் அணி பாஜகவிடம் ஆதரவை கோரிய சிறிது நேரத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜக அலுவலகத்துக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.