உண்மை நிலவரம் இது தான்… இறுதியில் மொத்தமாக ஒப்புக்கொண்ட சீனா


சீனாவில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 80% வரையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசாங்கத்தின் முதன்மை விஞ்ஞானி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

விஞ்ஞானி விடுத்துள்ள எச்சரிக்கை

அடுத்த 2 அல்லது மூன்று மாதங்களில் இந்த நிலை ஏற்படலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லூனார் விடுமுறையை முன்னிட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக ஒருபகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு பயணப்படுவதால், தொற்று பரவல் தீவிரமடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை நிலவரம் இது தான்... இறுதியில் மொத்தமாக ஒப்புக்கொண்ட சீனா | Outbreak Infected Vast Population Says China

@reuters

பல மில்லியன் மக்கள் இந்த விடுமுறை நாட்களில் தங்கள் குடும்பத்தினரை சந்திக்கும் பொருட்டு அல்லது சுற்றுலாவுக்காக நாட்டின் பல பகுதிகளுக்கு பயணப்பட உள்ளனர்.

இதுவரை, கடந்த 2020 தொடக்கம் முதல் இதுபோன்ற பயணங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மக்களின் கடுமையாக எதிர்ப்புக்கு பின்னர் மொத்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது.

தொற்று பரவல் அதிகரிக்கும்

இதனால், முன் தயாரிப்புகள் ஏதும் இல்லாத நிலையில், கிராமப்பகுதிகளில் தொற்று பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
ஜனவரி 12ம் திகதி வரையான தகவலின் அடிப்படையில், கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களில் சுமார் 60,000 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

உண்மை நிலவரம் இது தான்... இறுதியில் மொத்தமாக ஒப்புக்கொண்ட சீனா | Outbreak Infected Vast Population Says China

@reuters

இது டிசம்பர் மாத மத்தியில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டதாக சீனா அரசாங்கம் அறிவித்ததன் பின்னர் ஒரு மாத காலத்தில் பதிவான இறப்பு எண்ணிக்கையாகும்.

ஆனால் வெளியான இந்த எண்ணிக்கையை விடவும் உண்மை நிலவரம் பயப்படுத்தும் வகையில் இருக்கலாம் என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.