”ஏம்மா வேற வண்டியே இல்லயா?”.. மூதாட்டியை ஏற்றிச் செல்ல மறுத்த அரசு பேருந்து சிறைபிடிப்பு

’வேறு வாகனமே இல்லையா?’ என ஏளனமாய் பேசிய அரசு பேருந்து நடத்துனரை கண்டித்து பேருந்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நேற்றிரவு கணியூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், கணியூர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் பழநி கிளை போக்குவரத்து கழக பேருந்தில் பணயம் செய்ய ஏறியுள்ளார். அப்போது பணியிலிருந்த நடத்துனர் அவரை ஏற்ற மறுத்ததோடு வேறு பேருந்து ஏதும் இல்லையா அரசு பேருந்தில் வந்து ஏறவேண்டுமா என ஏளனமாக கேட்டுள்ளார். இதானால் அந்த மூதாட்டி வேறு அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார்.
image
இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து அவ்வழியே வந்து பழனி கிளை போக்குவரத்துகழக (8-D) பேருந்தை முற்றுகையிட்டு வாக்குவாததில் ஈடுபட்டனர். உரிய விளக்கம் தரவில்லையெனில் பேருந்தை விடப் போவத்தில்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து தனது செயலுக்கு நடத்துனர் வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் சமாதானமடைந்து அங்கிருந்து சென்றனர்.
image
வயதான பெண் பயணியை ஏற்ற மறுத்த பேருந்தை பொதுமக்கள் சிறிது நேரம் முற்றுகையிட்ட சம்வத்தால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.