
அடுத்த வாரம் டப்பிங் படங்களின் வாரம்
பொங்கலை முன்னிட்டு இரண்டு முன்னணி நடிகர்களான அஜித், விஜய் படங்கள் வெளிவந்தன. அப்படங்கள் பத்து நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அதனால் நேற்று ஒரே ஒரு படம் தவிர வேறு எந்தப் படங்களும் வெளியாகவில்லை. ஆனால், அடுத்த வாரம் சில பல படங்கள் வெளியாக உள்ளன. அவற்றில் டப்பிங் படங்களின் வரவுதான் அதிகம் இருக்கும் எனத் தெரிகிறது.
ஷாரூக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள 'பதான்' படம் தமிழிலும் டப்பிங் ஆகி 25ம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டு, முன்பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டது. மம்முட்டி, ரம்யா பாண்டியன் நடித்து மலையாளத்தில் வெளியான 'நண்பகல் நேரத்து மயக்கம்' படம் டப்பிங் ஆகி அடுத்த வாரம் வெளியாகலாம். அதேப்போல, உன்னி முகுந்தன் நடித்து டிசம்பர் 30ம் தேதி மலையாளத்தில் வெளியான 'மாளிகப்புரம்' படமும் அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளது.
தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஃபர்ஹான்' படம் ஜனவரி 26ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “கெழப்பய, மெய்ப்பட செய்' ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள படங்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.