இங்கிலாந்து கேப்டன் ஹரி கேனை ஒப்பந்தம் செய்யும் முன்னணி கால்பந்து கிளப்? பரவும் தகவல்கள்


இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டன் ஹரி கேன், டோட்டன்ஹாம் அணியில் இருந்து மான்செஸ்டர் அணிக்கு இடமாற்றம் செய்யப்படுவார் என்ற செய்தி பரவி வருகிறது.


ஹரி கேன்

29 வயதாகும் இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரமான ஹரி கேன், தற்போது டோட்டன்ஹாம் கிளப் அணியின் இறுதி ஆண்டில் இருக்கிறார். எனவே அவர் இந்த கோடையில் வேறு அணிக்கு மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரீமியர் லீக் போட்டிகளில் இந்த சீசனில் ஹரி கேன் 20 போட்டிகளில் 15 கோல்கள் அடித்து மிரட்டியிருக்கிறார்.

அவரது ஆட்டம் பாயர்ன் முனிச், ரியல் மாட்ரிட் அணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஹரி கேன்/Harry Kane

மான்செஸ்டர் யுனைடெட்

எனினும் அவரை நீண்ட காலத்திற்கு தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் யுனைடெட் கிளப் மேலாளர் எரிக் டென் ஹாக் தயாராக இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன.

அதேபோல் வீரர்களை மாற்றிக் கொள்ளும் ஸ்வாப் முறையிலும் ஹரி கேனை தங்கள் அணிக்கு கொண்டுவர மான்செஸ்டர் யுனைடெட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹரி கேன்/Harry Kane

@TOTTENHAM HOTSPUR FC/GETTY IMAGES

இந்த செய்திகள் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், இங்கிலீஷ் கால்பந்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.