மதுராந்தகத்திற்கு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஆம்புலன்சை எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அருகே உள்ள மதுராந்தகம் பகுதியில் கருங்குழி எனும் இடத்தில் ஆம்புலன்ஸ் டயரை பரிசோதிப்பதற்காக சாலையோரம் ஆம்புலன்ஸை ஓட்டுநர் நிறுத்திவிட்டு இறங்கி வந்துள்ளார். அப்போது, சைக்கிளில் ஒரு நபர் வந்து கொண்டிருந்தார்.
அவர் அமைதியாக சைக்கிளை நிறுத்திவிட்டு திடீரென்று ஆம்புலன்ஸில் ஏறி அதை எடுத்துக் கொண்டு ஓட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அரசு பேருந்தில் சென்றவாறு அந்த ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து ஓட்டி சென்றவரை பிடித்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர் சேர்ந்து அந்த நபரை கடுமையாக தாக்கி போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் ஆம்புலன்ஸை ஓட்டி சென்ற நபரின் பெயர் விக்கி என்பதும் அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.