கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசை கண்டித்து போராட்டம் நடத்திய ஐஎஸ்எப் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். மேற்கு வங்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதசார்பற்ற முன்னணி(ஐஎஸ்எப்) என்ற பெயரில் கட்சி தொடங்கப்பட்டது. இந்த கட்சிக்கு சட்டமன்றத்தில் ஒரே ஒரு எம்எல்ஏ உள்ளார்.சமீபத்தில் பங்கார் என்ற இடத்தில் ஐஎஸ்எப் கட்சி அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதை கண்டித்து,ஐஎஸ்எப் தொண்டர்கள் எம்எல்ஏ நவ்சாத் தலைமையில் நேற்று கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதில், தொண்டர்கள்,போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர்.